ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கொரநாட்டு கருப்பூர் பெட்டிகாளியம்மன் பல்லக்கு வீதியுலா

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்டிக்காளி அம்மன் பல்லக்கு வீதியுலா புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 1:53 am

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்டிக்காளி அம்மன் பல்லக்கு வீதியுலா புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் காவிரி ஆற்றில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் பெட்டிகாளியம்மன், அபிராமி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். காளியின் இடுப்புக்கு மேலே உள்ள உருவம் மட்டும் சிரசு வரைதான் வழிபாட்டில் உள்ளது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட பூ, எலுமிச்சம் பழம், மாலை மற்றும் விபூதி, குங்குமம் போன்றவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதில்லை.
இக்கோயிலில் ஆண்டுக்கொரு முறை காளியின் அருள் பெற்று உத்தராயண புண்ணிய காலத்தில் பல்லக்கு புறப்பாடு நடைபெறும். கோயிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் சன்னதி வரை பல்லக்கு ஓடிக்கொண்டேதான் இருக்கும். எங்குமே நிற்காமல் முன்னோட்டம் பின்னோட்டமாகவே வீதியுலா புறப்பாடு நடைபெறும். பல்லக்கு ஓடி கொண்டிருக்கும்போதே பக்தர்கள் கொடுக்கும் தீபாராதனை தட்டுகள், மாலைகளை பெற்று அம்மனுக்கு சேர்க்கப்படும். பல்லக்கின் எடையும் நேரமாக நேரமாக அதிகமாக கொண்டே செல்வதாக ஐதீகம். அம்மனின் உக்கிரமான தோற்றம்தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.  கடந்த 3 ஆண்டுகளாக கோயிலில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டதால் புறப்பாடு நடக்கவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது. 
மாலை வரை அனைத்து வீதிகளுக்கும் சென்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.