மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

பட்டுக்கோட்டையில் 224 பேருக்கு இலவச கண் பரிசோதனை

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 9:06 pm

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியன இணைந்து நடத்தின.
முகாமில் பங்கேற்ற 224 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 116 பேருக்கு கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, அவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமுக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.எஸ்.வீரப்பன் தலைமை வகித்தார். தொழிலதிபர் கே.பாரத் முகாமைத் தொடங்கி வைத்தார். லாரல் பள்ளித் தாளாளர் வி.பாலசுப்பிரமணியன், மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் கே.விவேகானந்தன், ஆர்.கே.பி.சந்திரசேகரன், ஏ.என்.ராஜேந்திரன், அ.பூவலிங்கம், ஆர்.ஜெயவீரபாண்டியன், ஆர்.அண்ணாதுரை, சங்க செயலர் எஸ். சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.