/

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

ஒரத்தநாடு வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி மோகன்(33). இவரது மனைவி செல்வலட்சுமி. தாய் நல்லம்மாள் (50).

Updated On :5 நவம்பர் 2018, 9:17 am IST

ஒரத்தநாடு வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி மோகன்(33). இவரது மனைவி செல்வலட்சுமி. தாய் நல்லம்மாள் (50). மோகன் தனது குடும்பத்தினருடன் தாய் நல்லம்மாளின் கண் அறுவை சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். 
ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது,  ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்ததது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.