பேராவூரணியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகண்டப் பிள்ளையார் கோயில் அருகில் விழிப்புணர்வு பிரசாரத்தை வட்டாட்சியர் எல். பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். புதிய பேருந்து நிலையம், மெயின்ரோடு, பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, ஆவணம் சாலை, ரயிலடி உள்ளிட்ட முக்கிய இடங்களில் துண்டுப் பிரசுரம் வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். குடிசைப் பகுதிகளில் ராக்கெட் வெடிகளை வெடிக்கக் கூடாது. பட்டாசு, மத்தாப்பு, வெடிகள் வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணியக்கூடாது. பருத்தியிலான ஆடைகளையே அணிய வேண்டும். திறந்த வெளியிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக யார் மீதேனும் தீப்பற்றினால் அதிகம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க வேண்டும். எதிர்பாரா விபத்துக்கள் ஏற்பட்டால் தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என பிரசாரத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


