கும்பகோணத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைவினைஞர் முன்னேற்ற கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் காந்திபூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பொன். கனகராஜ் , மாநில அவைத்தலைவர் சேகர், மாநில மகளிரணி தலைவி ஸ்ரீஜனனிமாதா, மாநில இளைஞரணி செயலாளர் உமாபதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
இதில், 28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும், கண்ணார், தச்சர், கருமார், சிற்பி, பொற்கொல்லர் உள்ளிட்ட விஸ்வகர்மா சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், கோயில்களில் தொழில்நுட்ப பராமரிப்பு சிறப்பு நிபுணர்களாக மேற்கண்ட தொழிலாளர்களை நியமனம் செய்திட வேண்டும், வங்கிகளில் கமிஷன் அடிப்படையில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்களை வங்கி ஊழியர்களாக்க வேண்டும், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. முன்னதாக, மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் வீரமுத்து, இளங்கோவன், மாநில துணைத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

நாசிக் டிசிஎஸ் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட நிதா கான் கைது!

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை!

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

