15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

மாணவர்களுக்கு  கல்வி உதவித் தொகை அளிப்பு

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:51 am IST

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் விழா கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கும்பகோணத்திலுள்ள அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் பைசல் முஹம்மது, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் மாவட்ட செயலாளர் மெளலவி மாலிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா  மற்றும் ஆக்சிஸ் இந்தியாவின் பயிற்றுவிப்பாளர் நூருல்லாஹ்  ஹூசைன் ஆகியோர் 25 மாணவர்களின் உயர்கல்விக்காக ரூ. 2.50 லட்சம் உதவித்தொகையை காசோலையாக வழங்கினர். 
முன்னதாக,  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் வரவேற்றார். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பக்ருதீன்  வாழ்த்தி பேசினார். நிறைவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது சயீப் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.