
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, நிகழாண்டு விழா கடந்த 4 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து வாஸ்துசாந்தி நடைபெற்றது. இதையடுத்து புதன்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை கஜமுகாசுர வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
செப்டம்பர் 6 ஆம் தேதி காலையில் பல்லக்கு திருவீதியுலாவும், மாலையில் காமதேனு வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறுகிறது. வரும் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலை தேவேந்திர பூஜை நடக்கிறது. தொடர்ந்து திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை மூஷிக வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் 15 ஆம் தேதி சுத்தாபிஷேகம் நடைபெற உள்ளது.
கோயிலில் தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் வேதபாராயணம், திருமுறை பாராயணம், சிறப்பு நாகசுர இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. அதேபோல, காலை வேளையில் பல்லக்கு திருவீதியுலாவும், மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





