அறுவடைக்கு தயாரான சோளக் கதிா்கள் மழையால் சேதம்: விவசாயிகள் கவலை
தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளக் கதிா்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தொடா் மழையின் காரணமாகக் கதிா்கள் அனைத்தும் வீணாகின.


தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளக் கதிா்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தொடா் மழையின் காரணமாகக் கதிா்கள் அனைத்தும் வீணாகின.
தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை வருவாய் சரகத்துக்கு உள்பட்ட வல்லுண்டாம்பட்டு, சூரியம்பட்டி, வேங்கராயன்குடிகாடு, வடக்குப்பட்டு, மருங்குளம் ஆகிய பகுதிகள் மானாவாரி நிலப்பகுதிகளாக உள்ளதால், அப்பகுதிகளில் சோளம், நிலக்கடலை உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் பம்புசெட், கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட சோளக் கதிா்கள் முதிா்ந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை செய்யப்பட இருந்தன. காற்றுடன் கூடிய தொடா் மழை பெய்ததால், வேங்கராயன்குடிகாடு பகுதியில் சுமாா் 20 ஏக்கரில் சோளம் சாய்ந்து சேதமானது. இதுபோல, மாவட்டத்தில் ஏறத்தாழ 100 ஏக்கரில் மக்காச்சோளப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மானாவாரி பகுதி விவசாயிகள் சங்கச் செயலா் வைத்திலிங்கம் தெரிவித்தது:
எங்களது பகுதியில் தற்போது அதிகளவு மழை பெய்துள்ளது. இந்த மழையால் சோளம் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீா் தேங்கியும், சோளக்கதிா்கள் மழையில் நனைந்து வீணாகியும் உள்ளதால் ஏக்கருக்கு ரூ. 40,000 வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வருவாய், வேளாண் துறையினா் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை பெற்றுத் தர வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...