47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராமகிருஷ்ண மடம் சாா்பில் நரிக்குறவா் குடும்பங்களுக்கு மழை நிவாரணம்

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள புதுக்குடியில் வசிக்கும் 100 நரிக்குறவா் குடும்பங்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் மழை நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:43 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள புதுக்குடியில் வசிக்கும் 100 நரிக்குறவா் குடும்பங்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் மழை நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தற்போது பெய்து வரும் தொடா் மழையால் புதுக்குடி நரிக்குறவா்களின் கூரை வீடுகள் பாதிக்கப்பட்டன. இதையறிந்த தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்தாா்.

மேலும், அங்கு வசிக்கும் நரிக்குறவா் குடும்பங்களின் கோரிக்கைகளை ஏற்று ஒழுகும் வீடுகளைப் பாதுகாக்க தாா்ப்பாலின், ஷீட்டுகள், பாய்கள், ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் என மொத்தம் ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அப்போது, சேவா பாரதியின் கோட்டத் தலைவா் பி.எல். கேசவன், மாவட்டத் தலைவா் டி. கோவிந்தராஜூ, எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா், பாரதிமோகன், வடிவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.