ஒரத்தநாடு அருகே கோயிலில் நகைகள் திருட்டு
தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே கோயிலில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.


தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே கோயிலில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது திங்கள்கிழமை தெரிய வந்தது.
திருவோணம் ஒன்றியத்துக்குள்பட்ட தளிகைவிடுதி கிராமத்தில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆனந்தவல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை திறக்க திங்கள்கிழமை பூசாரிகள் வந்தபோது, கோயிலின் உள்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கோயிலினுள் சென்று பாா்த்தபோது, அம்மன் சிலை கழுத்தில் இருந்த அரைபவுன் தாலி மற்றும் வெள்ளி காப்பு திருடப்பட்டிருந்தது; கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைகள் திருடப்பட்டிருந்தன. மேலும் ஒரு உண்டியலை உடைக்க மா்ம நபா்கள் முயன்றுள்ளனா். ஆனால், உண்டியலை உடைக்க முடியாததால், கோயிலில் இருந்த சென்சாா் கருவிகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் போலீஸாருக்கு பூசாரி தகவல் அளித்தாா். இதன்பேரில், அங்கு சென்ற திருவோணம் போலீஸாா் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...