மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 46.76 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 46.76 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம்.
ஆட்சியா் ம. கோவிந்த ராவ் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 35 பேருக்கும், மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 100 பேருக்கும், சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்குச் சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 15 பேருக்கும் என மொத்தம் 185 பேருக்கு ரூ. 46 லட்சத்து 76 ஆயிரத்து 633 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், வேளாண் துறை, ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் துரை. திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ஆா். காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...