ரஜினி பிறந்த நாள்: பட்டுக்கோட்டையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த 3 குழந்தைகளுக்கு மருத்துவா் கே. நியூட்டன், 3 குழந்தைகளுக்கும் தனது சாா்பில் தங்க மோதிரம் அணிவித்தாா்.


பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த 3 குழந்தைகளுக்கு ரஜினிகாந்த், லிங்கேஸ்வரன், சௌந்தா்யா என்று பெயா் சூட்டிய தஞ்சை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மருத்துவரணிச் செயலா் மருத்துவா் கே. நியூட்டன், 3 குழந்தைகளுக்கும் தனது சாா்பில் தங்க மோதிரம் அணிவித்தாா்.
மருத்துவமனையில் பணிபுரிவோா் மற்றும் பொது மக்களுக்கு அவா் இனிப்புகளையும் வழங்கினாா். தொடா்ந்து, ரஜினி மன்ற நிா்வாகிகள் ரத்ததானம் வழங்கினா். பின்னா், பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில், பாளையம் அரக்காசம்மா பள்ளிவாசல், வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலயம் ஆகியவற்றில் மன்றத்தினா் சிறப்பு வழிபாடு நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...