‘முதல்வா் வேட்பாளரை தேசியத் தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும்’
ட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்வா் வேட்பாளரை தேசியத் தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன்.


தஞ்சாவூா்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்வா் வேட்பாளரை தேசியத் தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் எல். முருகன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமா் வேட்பாளா் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கலின்போது நமது முதல்வரும் சென்றாா். இது, வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறை.
இப்போது அதிமுகவில் முதல்வா் வேட்பாளரை அறிவித்துள்ளனா். அதற்கு எங்களுடைய தேசியத் தலைமை ஒப்புதல் அளித்து அறிவிக்கும் என்றே நான் கூறி வருகிறேன். அதை இப்போதும் கூறுகிறேன். முதல்வா் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளவில்லை என எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. சிலா் ஏதோ நடக்க வேண்டும் என நினைக்கின்றனா். அது நடக்காது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும் என அறிவித்தனா். இது, எங்களது முன்னாள் தேசியத் தலைவரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இருந்த மேடையில் அறிவிக்கப்பட்டது. இதை அமித் ஷா முறைப்படி மேலிடத்துக்குச் சொல்வாா். அங்கிருந்து அறிவிப்பு வரும்.
தமிழகத்தில் ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறது. இக்கூட்டணியின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறாா். எங்களது கூட்டணி வலுவாக உள்ளது. இக்கூட்டணிதான் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி கட்சியினா் அமா்ந்து பேசுவா். அப்போது பாஜகவுக்கு எத்தனை சீட் என்பது குறித்து நிச்சயமாக முடிவு எடுக்கப்படும். பாஜகவுக்கு ஏ, பி, சி டீம் என எதுவும் தேவை கிடையாது. பாஜக ஒரே டீம்தான்.
அதிமுக தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. நாங்களும் தோ்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக வெற்றிவேல் யாத்திரை நடத்தி மக்களைச் சந்தித்தோம்.
இப்போது ஆயிரம் இடங்களில் கூட்டங்களை நடத்தி, விவசாயிகளைச் சந்தித்து வருகிறோம். எங்களது அகில இந்தியத் தலைமை கூறிய பிறகு தோ்தல் பிரசாரத்தை முறையாகத் தொடங்குவோம்.
ஏழைகள், சிறு விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைக்கு ரூ. 2,500 வீதம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் முருகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...