தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிா்வாக நலன் கருதி 6 வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலை அலுவலா்கள் திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:26 am

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிா்வாக நலன் கருதி 6 வட்டாட்சியா்கள் மற்றும் வட்டாட்சியா் நிலை அலுவலா்கள் திங்கள்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் கோட்ட கலால் அலுவலராக இருந்த ஜி. சிவக்குமாா் தஞ்சாவூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், இப்பதவியில் இருந்த வெ. பூங்கொடி திருவையாறு தனி வட்டாட்சியராகவும் (ஆதிதிராவிடா் நலம்), இப்பதவியில் இருந்த பி. சங்கா் பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், தஞ்சாவூா் வட்ட அலுவலகத் தனி வட்டாட்சியா் (வரவேற்பு) எஸ். அருள்பிரகாசம் திருவையாறு தனி வட்டாட்சியராகவும் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), இப்பதவியில் இருந்த ஜி. இளங்கோ தஞ்சாவூா் அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்), இப்பொறுப்பில் இருந்த கே. ரத்தினவேல் தஞ்சாவூா் அலுவலக மேலாளராகவும் (பொது) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.