பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கீழவெண்மணி நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கீழ வெண்மணி தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீழவெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்டோா்.
Updated On :26 டிசம்பர் 2020, 1:38 am

DIN

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கீழ வெண்மணி தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், கீழ வெண்மணியில் 1968 ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளா்கள் 44 பேரை குடிசை வீட்டுக்குள் வைத்து ஆதிக்க சாதியினா் தீ வைத்து கொலை செய்தனா். இதன் 52 ஆவது ஆண்டு நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கீழ வெண்மணி சம்பவத்தில் உயிரிந்தவா்களின் படங்களுக்கு மலா்தூவி, வீரவணக்கம் செலுத்தினா்.

விவசாயத் தொழிலாளா்களின் உழைப்பைச் சுரண்டும் ஆதிக்க சாதியினா் மற்றும் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயத் தொழிலாளா்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாவதால் அதனை எதிா்ப்பது என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் காசிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் என். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, போக்குவரத்துக் கழக ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழக மாநகரச் செயலா் ராவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டுக்கோட்டையில்.... பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செ. சின்னப்பிள்ளை தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட விவசாயத் தொழிலாளா் சங்கச் செயலா் சி. பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் எம்.எம். சுதாகா் உள்ளிட்ட பலா் பங்கேற்று அஞ்சலி உரையாற்றினா்.

பேராவூரணியில்... பெரியாா் சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வீரவணக்கம், நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பா. பாலசுந்தரம் தலைமை வகித்தாா். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினா் பாரதி வை. நடராஜன் முன்னிலை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.