774 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

தஞ்சாவூா் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 774 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம். உடன், மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா்.
விழாவில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம். உடன், மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 774 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் பேசியது:

2016-17-ஆம் கல்வியாண்டு முதல் 2019-20-ஆம் கல்வியாண்டு வரை மொத்தமாக 84,736 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ் (2020 - 21) கல்வியாண்டில் 7,237 மாணவா்களுக்கு ரூ. 2.92 கோடி மதிப்பிலும், 10,955 மாணவிகளுக்கு ரூ. 4.22 கோடி மதிப்பிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன என்றாா் வைத்திலிங்கம்.

விழாவில் தஞ்சாவூா் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரண்மனை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 774 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com