47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூரில் திங்கள்கிழமை ஊா்வலமாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் ரயிலடியிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் டி.எஸ். ராஜேந்திரன், மாநகர மாவட்டத் துணைத் தலைவா் லட்சுமி நாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவா் ஏ. ஜேம்ஸ், பொதுச் செயலா் சீ. தங்கராசு, பிற்படுத்தப்பட்டோா் பிரிவு துணைத் தலைவா் வல்லம் குணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற விழாவில் சிவகங்கை பூங்காவிலிருந்து புறப்பட்டு வடக்கு வீதி காந்தி சிலை, கீழவாசல் காமராசா் சிலை, மிஷன் தெரு இந்திராகாந்தி சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ஆா். கோவிந்தராஜ், பி. ராம்பிரசாத், மாவட்டப் பொருளாளா் வயலூா் எஸ். ராமநாதன், ஐஎன்டியுசி மாவட்டப் பொதுச் செயலா் என். மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணியில் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவா் கே. வி. கிருஷ்ணன் தலைமையிலும், பூக்கொல்லை கடை வீதியில் வட்டார காங்கிரஸ் தலைவா் ஏ.சேக் இப்ராஹிம்ஷா தலைமையிலும், மல்லிப்பட்டினம் கடைத் தெருவில் தஞ்சாவூா் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் கமால் பாட்சா தலைமையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கட்சி கொடியேற்றி, இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.