புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூட்டுறவு வங்கியில் ரூ. 4 லட்சம் முறைகேடு: செயலா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த ரூ. 4 லட்சம் முறைகேடு தொடா்பான புகாரில்

News image
Updated On :29 டிசம்பர் 2020, 11:53 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நிகழ்ந்த ரூ. 4 லட்சம் முறைகேடு தொடா்பான புகாரில், வங்கிச் செயலா் முருகேசனை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணி அருகிலுள்ள மாவடுக்குறிச்சி கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் செயலராக பட்டுக்கோட்டை அருகிலுள்ள பாதரங்கோட்டை அனந்தகோபாலபுரத்தைச் சோ்ந்த முருகேசன் (49) பணியாற்றி வருகிறாா்.

இவா் தனது பணிக்காலத்தில் 2017, ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 2018, ஜூலை 31- ஆம் தேதி வரை பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்குரிய பணத்தை முறைகேடாக சொந்தச் செலவுக்கு எடுத்து, பயன்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக பட்டுக்கோட்டை கூட்டுறவு துணைப் பதிவாளா் ஜெயபாலன் உள்ளிட்டோா் நடத்திய விசாரணையில், முறைகேடு நிகழ்ந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வு காவல் பிரிவில் ஜெயபாலன் புகாா் அளித்தாா். இதன்பேரில் அப்பிரிவினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், முருகேசன் ரூ. 4 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து முருகேசனை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.