காவிரியில் தண்ணீர் வராததால் கல்லணை திறப்பு தாமதமாகிறது.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை உரிய காலத்தில் திறந்துவிடப்பட்டது.
இந்தத் தண்ணீர் கரூர் மாவட்டத்திற்கு ஜூன் 13-ம் தேதி வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம், முக்கொம்புக்கு திங்கள் கிழமை பிற்பகல் வந்தது. எனவே கல்லணைக்கு திங்கள்கிழமை இரவு தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையொட்டி கல்லணை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
ஆனால் செவ்வாய்க்கிழமை 11 மணியை கடந்தும் தண்ணீர் வந்தடையாததால் கல்லணை திறப்பு தாமதமாகிறது. தற்போது தண்ணீர் வேங்கூரை தாண்டி வந்து கொண்டிருப்பதால் பிற்பகலில் கல்லணை திறப்பு நடைபெற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


