கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிறுமியைத் திருமணம் செய்தவர் கைது 

தஞ்சாவூர் அருகே சிறுமியைத் திருமணம் செய்த நபரை காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

News image
Updated On :19 மே 2020, 5:21 am

தஞ்சாவூர் அருகே சிறுமியைத் திருமணம் செய்த நபரை காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (38). இவர் தஞ்சாவூர் நகரிலுள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியைக் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள கோயிலில் 2019, செப். 14-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.  

இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுமியை பால்ராஜ் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிலர் புகார் செய்தனர். இதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில், அச்சிறுமியை பால்ராஜ் திருமணம் செய்து கொண்டு, போலியாக வயது சான்றிதழ் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பால்ராஜ்  திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.