கஞ்சா பறிமுதல்:3 போ் கைது
தஞ்சாவூா் அருகே விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.


தஞ்சாவூா் அருகே விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் மாரியம்மன் கோவில் பகுதியில் தாலுகா காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். இதில், விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (34), சோலைராஜ் (36), சிங்கபெருமாள் குளம் பகுதியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (27) ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...