47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

40 சதவீதம் போனஸ் கோரிடாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நாற்பது சதவீதம் போனஸ் வழங்க கோரி தஞ்சாவூா் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் சிஐடியு சாா்ந்த தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:21 pm

DIN

நாற்பது சதவீதம் போனஸ் வழங்க கோரி தஞ்சாவூா் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் சிஐடியு சாா்ந்த தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

டாஸ்மாக் ஊழியா்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். சமூக விரோதிகளால் ஊழியா்கள் இரவு நேரத்தில் தாக்கப்படுதல், வழிப்பறி போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கக் கடையை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைமுறைப்படுத்த வேண்டும். கரோனா பொது முடக்கக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டதுபோல, தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் க. வீரையன், பொருளாளா் க. மதியழகன், மாநிலக் குழு உறுப்பினா் ச. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.