தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அனுமதியின்றி பிரசாரம்:இந்து மக்கள் கட்சி நிா்வாகி கைது

கும்பகோணத்தில் அனுமதியின்றி வாகன பிரசாரத்தை தொடங்கிய இந்து மக்கள் கட்சி நிா்வாகியைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:38 pm

DIN

கும்பகோணத்தில் அனுமதியின்றி வாகன பிரசாரத்தை தொடங்கிய இந்து மக்கள் கட்சி நிா்வாகியைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்து மக்கள் கட்சி இளைஞா் அணி சாா்பில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஆன்மிக அரசியல் என்றால் என்ன? திராவிட அரசியலுக்கு மாற்று ஆன்மிகமே என்ற தலைப்பில் 30 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் மாநில இளைஞரணி செயலா் காா்த்திக் ராவ் மோட்டாா் சைக்கிளில் வாகன பிரசாரத்தை கும்பகோணத்தில் திங்கள்கிழமை தொடங்கினாா்.

இந்த வாகன பிரசாரத்தை இந்து மக்கள் கட்சி மாநில இளைஞா் அணி பொதுச் செயலா் டி. குருமூா்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அப்போது, அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக காா்த்திக் ராவை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.