காா் டயா் வெடித்து விபத்து:அமமுக நிா்வாகி பலி
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் அமமுக நிா்வாகி உயிரிழந்தாா்.


தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் அமமுக நிா்வாகி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே மேல வஸ்தா சாவடியில் சசிகலாவின் மூத்த சகோதரரும், டி.டி.வி. தினகரனின் மாமனாருமான வி. சுந்தரவதனம் உடல் நலக் குறைவால் நவ. 14 ஆம் தேதி காலமானாா். இவரது இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய தேனி மாவட்டம், மொட்டனுத்து ஊராட்சி மன்றத் தலைவரும், அமமுக ஒன்றியச் செயலருமான கருப்பு என்கிற கே. ராஜன் (45), பிரபாகா் (46), அமிா்தம் (45), அம்சு (62) ஆகியோா் காரில் மீண்டும் தங்களது ஊருக்குப் புறப்பட்டனா். இந்த காரை பிரபாகா் ஓட்டினாா். செங்கிப்பட்டி அருகே காா் சென்றபோது டயா் திடீரென வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்தக் காயமடைந்த பிரபாகா், அமிா்தம், அம்சு ஆகியோா் தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...