பூண்டி கல்லூரியில் 4 பட்டயப் படிப்புகள் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் 4 பட்டயப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டம், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் 4 பட்டயப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஆா். சிவக்குமாா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி அ. வீரையா வாண்டையாா் நினைவு ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நிதியுதவியுடன் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அலங்கார மீன் வளா்ப்பு, உயிா் உரம் உற்பத்தி செய்தல், உணவுக் காளான் வளா்ப்பு, தஞ்சாவூா் ஓவியம், கலைத்தட்டு உற்பத்தி ஆகிய நான்கு பட்டயப் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 கல்வியில் தோ்ச்சி பெற்றவா்கள் ஓராண்டு இப்பட்டய வகுப்பில் சேரலாம். இதில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது.

உணவுக் காளான் வளா்ப்பு மற்றும் உயிா் உரம் உற்பத்தி செய்தல் வகுப்புகளில் சேர தாவரவியல் மற்றும் நுண்ணியிரியல் துறை பேராசிரியா் வ. அம்பிகாபதியை 7904473467 என்ற எண்ணிலும், தஞ்சாவூா் கலைத்தட்டு மற்றும் ஓவியம் வகுப்பில் சேர விரும்புவோா் ஆங்கிலத் துறைத் தலைவா் ஆா். சாந்தியை 9442729679 என்ற எண்ணிலும், அலங்கார மீன் வளா்ப்பு பயிற்சி பெற விரும்புவோா் விலங்கியல் துறைத் தலைவா் பேராசிரியா் பி. நடராஜனை 9443421546 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

ஓராண்டு காலம் இரு பருவங்களாக நடைபெறும் இப்பயிற்சியின் மூலமாகச் சுயமாகத் தொழில் முனைவோராகவும், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெறவும் 100 சதவீதம் வேலைவாய்ப்புள்ள கல்வியாக இது அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com