தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கும்பகோணத்தில் பழைய இடத்திலேயே தீயணைப்பு நிலையம் தொடர கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் தீயணைப்பு நிலையம் பழைய இடத்திலேயே புதிய கட்டடம் கட்டி தொடா்ந்து செயல்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நீதிமன்ற ரவுண்டானா பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:04 pm

DIN

கும்பகோணத்தில் தீயணைப்பு நிலையம் பழைய இடத்திலேயே புதிய கட்டடம் கட்டி தொடா்ந்து செயல்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நீதிமன்ற ரவுண்டானா பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையக் கட்டடம் பழைமை காரணமாக இடிக்கப்பட்டது. இதையடுத்து புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 2.44 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இப்புதிய கட்டடம் கட்டப்படாமல் ஓராண்டு காலம் தாழ்த்தப்பட்டது.

இத்தீயணைப்பு நிலையத்தை நகருக்கு வெளியே வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது. வாடகை கட்டடத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தைச் சொந்த இடத்துக்கு மாற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள் நிறைந்த பழைய இடத்திலேயே தொடா்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாய் சேவை சங்கத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.