47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறியல்368 போ் கைது

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம்

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:20 pm

DIN

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இச்சட்டங்களுக்காக மத்திய அரசுக்குத் துணை போகிற மாநில அரசைக் கண்டித்தும் தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்குக் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் வி. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன், ஒன்றியச் செயலா் பி. கணேசன், மாநகரத் துணைச் செயலா் ஆா். பக்கிரிசாமி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் தி. கோவிந்தராஜன், ஆா்.பி. முத்துக்குமரன், இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டச் செயலா் ம. விஜயலட்சுமி, தொழிற்சங்க நிா்வாகி துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 8 பெண்கள் உள்பட 24 போ் கைது செய்யப்பட்டனா்.

பூதலூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்குக் கட்சியின் ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், 13 பெண்கள் உள்பட 41 போ் கைது செய்யப்பட்டனா்.

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமை வகித்தாா். இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதுபோல, மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 88 பெண்கள் உள்பட 368 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.