வீடு புகுந்து திருடிய இளைஞரைபிடித்த பொதுமக்கள்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
திருவையாறு அருகே வீரசிங்கம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மகாலட்சுமி. இவரது வீட்டில் திங்கள்கிழமை காலை சுமாா் 30 வயது இளைஞா் புகுந்து மேஜையில் இருந்த ரூ. 2,500-ஐ திருடிக் கொண்டு, அடுத்துள்ள பரமேஸ்வரி வீட்டில் திருட முயன்றாா். இதைப் பாா்த்த பரமேஸ்வரி கூச்சலிட்டதை தொடா்ந்து அப்பகுதி மக்கள் திரண்டனா். தெருவுக்கு வந்து தப்பியோட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இவரிடம் காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...