மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மதுக்கூர் கோவிலில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

தஞ்சாவூர் மதுக்கூரில் உள்ள கோவிலில் மர்மநபர்கள் புகுந்து தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

News image

கொள்ளை நடைபெற்ற  மாரியம்மன் கோயில்

Updated On :5 செப்டம்பர் 2020, 1:01 pm

தஞ்சாவூர் மதுக்கூரில் உள்ள கோவிலில் மர்மநபர்கள் புகுந்து தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் அருள்மிகு முளைக்கொட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கோயில் பூசாரி அம்மனுக்கு பூஜை முடித்து கோவிலைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Story image

மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட நகைப்பெட்டகம்

அதன்பின்னர், நள்ளிரவுக்கு மேல் மர்ம நபர்கள் சிலர் வடக்குப்புறத்திலுள்ள கோவிலின் கதவின் பூட்டை உடைத்துக் கோயிலுக்குள்  புகுந்து, விழா காலங்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் இருந்த பெட்டகத்தை உடைத்துள்ளனர். பின் அதிலிருந்த 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5,000 ரொக்கம் ஆகியவற்றையும்,  அடுத்து, கோயில் கருவறை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த அரை பவுன் தாலியையும் திருடிச் சென்று விட்டனர்.

நடந்த திருட்டு சம்பவத்தை சனிக்கிழமை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் காவல்துறையினரிடம் புகாரளித்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்ததும் பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் மதுக்கூர் காவல்துறையினர் சனிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மேலும் தடயவியல் நிபுணர்கள் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து, கோயில் நிர்வாகக்குழுத் தலைவர் அ.வைரவசுந்தரம் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் மதுக்கூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.