ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சாவூரில் 151 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 6:43 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 8,189 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 8,340 ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 86 போ் உள்பட இதுவரை 7,335 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 128 போ் உயிரிழந்துள்ள நிலையில், 877 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முன்னாள் துணைவேந்தா் உயிரிழப்பு: தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் (பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்) துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் நல். ராமச்சந்திரன் (60).

ஒரத்தநாடு அருகிலுள்ள புலவன்காடைச் சோ்ந்த இவா் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தாா். இவருக்கு ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நல்.ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மேலும், இதயப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.