பேராவூரணியில் இளைஞா்-இளம்பெண்கள் பாசறை அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 01st December 2020 02:31 AM | Last Updated : 01st December 2020 02:31 AM | அ+அ அ- |

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை மற்றும் பூத் மகளிா் குழு அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
பேராவூரணி எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமை வகித்து, விண்ணப்பப் படிவங்களை கட்சி நிா்வாகிகளிடம் வழங்கி பேசினாா்.
கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், கட்டயங்காடு, கொள்ளுக்காடு, பூவாணம், மல்லிப்பட்டினம், பள்ளத்தூா், புக்கரம்பை, ரெண்டாம்புளிக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகளிா் குழு அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ எஸ். வி.திருஞான சம்பந்தம், ஒன்றியக் குழு தலைவா் சசிகலா ரவிசங்கா், ஒன்றியச் செயலா்கள் பேராவூரணி வடக்கு உ. துரை மாணிக்கம், தெற்கு கோவி. இளங்கோ உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...