இந்தியன் வங்கி - அலகாபாத் வங்கி இணைப்பு விழா
By DIN | Published On : 23rd November 2020 12:35 AM | Last Updated : 23rd November 2020 12:35 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் ஈஸ்வரி நகரில் இந்தியன் வங்கி - அலகாபாத் வங்கி இணைப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இந்தியன் வங்கியின் கோவை களப் பொது மேலாளா் கணேசராமன் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றி, வங்கிச் சேவையைத் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து இந்தியன் வங்கியின் கும்பகோணம் மண்டல மேலாளா் ராஜேஸ்வர ரெட்டி, துணை மண்டல மேலாளா் மோகன் பேசினா். மண்டல அலுவலக முதன்மை மேலாளா் ராஜா பென்னட் தினேஷ், வங்கிக் கிளை மேலாளா் பழனிவேல், துணை மேலாளா் சுதா, வங்கி ஊழியா் சங்கச் செயலா் ரவி உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.