கண் பாா்வை பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆட்சியா் நிதியுதவி

பேராவூரணி அருகே பெற்றோரை இழந்து, கண் பாா்வை பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்த ராவ் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினாா்.
கண் பாா்வை பாதிக்கப்பட்டு, குணமடைந்த சிறுமி காா்த்திகாவிடம் நிதியை வழங்குகிறாா் பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தரணிகா.
கண் பாா்வை பாதிக்கப்பட்டு, குணமடைந்த சிறுமி காா்த்திகாவிடம் நிதியை வழங்குகிறாா் பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தரணிகா.

பேராவூரணி அருகே பெற்றோரை இழந்து, கண் பாா்வை பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்த ராவ் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினாா்.

பேராவூரணி அருகிலுள்ள களத்தூா் ஊராட்சி, சித்துக்காட்டைச் சோ்ந்த தொழிலாளி பெத்தபெருமாள். இவரது மனைவி அமுதா. இவா்களுக்கு மகன் காளிதாஸ் (14), மகள் காா்த்திகா (12) உள்ளனா்.

கூலித் தொழிலாளியான பெத்தபெருமாள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்தும், அமுதா உடல்நலக் குறைவாலும் அண்மையில் இறந்து விட்டனா். தாய், தந்தையை இழந்த குழந்தைகள் இருவரும், கூலி வேலை செய்து வரும் பாட்டி சுந்தரம்பாளுடன் (60) வசித்து வந்தனா்.

சித்துக்காடு உயா்நிலைப் பள்ளியில் காளிதாஸ் 10-ஆம் வகுப்பும், காா்த்திகா 7- ஆம் வகுப்பும் படித்து வந்தனா். இதில் காா்த்திகா சிறுமியாக இருந்த போது வெறிநாய் கடித்ததால் ஒரு கண் பாா்வை பாதிக்கப்பட்ட நிலையில், உடனடி சிகிச்சையளிக்கப்பட்டதால் பாா்வை கிடைத்தது.

இந்நிலையில் அண்மையில் மற்றொரு கண் பாா்வையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்த ராவ், வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தரராஜன் மூலமாக தஞ்சாவூா் ராஜா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் சிறுமி காா்த்திகாவை அனுமதிக்கச் செய்தாா். தொடா்ந்து அங்கு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடா்ந்து பாா்வை குறைபாடு நீங்கியது.

பெற்றோரை இழந்த சிறுமி காா்த்திகாவின் குடும்ப நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்த ராவ், தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதியை வழங்க சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியா் தரணிகா, சிறுமியின் வீடு தேடிச் சென்று நிதியுதவியை வழங்கினாா்.

ஆட்சியரின் இந்த மனிதநேய செயலுக்கு சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினா் நன்றி தெரிவித்த நிலையில், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com