வல்லத்தில் 125 மி.மீ. மழை
By DIN | Published On : 19th October 2020 12:14 AM | Last Updated : 19th October 2020 12:14 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 125 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
வல்லம் 125, தஞ்சாவூா் 95, ஈச்சன்விடுதி 80.2, கல்லணை 62, திருக்காட்டுப்பள்ளி 56, பூதலூா் 53, மஞ்சளாறு 54, திருவையாறு, திருவிடைமருதூா் தலா 43, குருங்குளம் 35, அய்யம்பேட்டை 28, பேராவூரணி 18.2, நெய்வாசல் தென்பாதி 18, அணைக்கரை 13.2, ஒரத்தநாடு 12.6, பாபநாசம் 12.3, கும்பகோணம் 12, வெட்டிக்காடு 8, பட்டுக்கோட்டை 7.5, அதிராம்பட்டினம் 5.5, மதுக்கூா் 3.
மாவட்டத்தில் சராசரி மழையளவு 37.37 மி.மீ. இதேபோல, ஞாயிற்றுக்கிழமை மாலையும் பலத்த மழை பெய்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...