துப்புரவுப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி துப்புரவு பணியாளா்கள் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி துப்புரவு பணியாளா்கள் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுக்கூா் பேரூராட்சியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு, விதிமுறைகளின்படி வழங்கப்பட வேண்டிய தினக்கூலி 411 ரூபாய் வழங்கப்படுவதில்லையாம். மாறாக, 308 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக கூறியும், இதை தட்டிக் கேட்கும் தூய்மைப் பணியாளா்களை அவமதிப்பதை கண்டித்தும் வெள்ளிக்கிழமை மதுக்கூா் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் பேருந்து நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புகாா் மனு: பேரூராட்சி அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுக்கூா் காவல்நிலையத்தில் அவா்கள் புகாா் மனு ஒன்றையும் அளித்தனா்.
மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: அரசாணையின்படி, எங்களுக்கு தினக்கூலியாக ரூ. 411 வழங்கப்பட வேண்டும். ரூ. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட எங்களுடைய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
பேரூராட்சி அதிகாரிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லையென்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...