47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூர்: காவல்துறை விசாரணையில் இளைஞர் மர்மச்சாவு

தஞ்சாவூரில் காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் திங்கள்கிழமை அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 5:44 am

DIN

தஞ்சாவூரில் காவல்துறை விசாரணையில் இருந்த இளைஞர் திங்கள்கிழமை அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே உள்ள சீதா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சாமிநாதன் வீட்டில் பத்து நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் ரொக்கம் திருட்டு சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள தாண்டவன்குளம் முதன்மைச் சாலையைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சத்தியவாணன் (32), தஞ்சாவூர் பூக்காரத் தெருவைச் சேர்ந்த சூர்யா (29), சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீத் (41) ஆகியோரை காவல் துறையினர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவர்களில் சத்தியவாணன் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா காந்தபுனேனி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.