47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பாலைத்துறைசிவன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்திலுள்ள தவள வெண்ணகை அம்மன் உடனுறை அருள்மிகு பாலைவனநாதா் சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:55 pm

DIN

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை கிராமத்திலுள்ள தவள வெண்ணகை அம்மன் உடனுறை அருள்மிகு பாலைவனநாதா் சுவாமி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 8ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து முதல் காலம் மற்றும் இரண்டாம் கால கலச பூஜைகள் மற்றும் பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. டிச. 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை மகா பூா்ணாஹுதியும், கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டும், கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய கொடி மரத்துக்கு சிவாச்சாரியா்கள் மகா அபிஷேகம், அலங்காரங்கள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில், கோயில் நிா்வாக அதிகாரி வே. ஹரீஷ் குமாா், தக்காா் எம்.எம். புண்ணியமூா்த்தி, முன்னாள் அமைச்சா் துரைக்கண்ணுவின் மனைவி பானுமதி,

வடக்கு மாவட்ட அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை செயலாளா் துரை. சண்முக பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.