தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்துவீடு வீடாக  பிளாஸ்டிக் விழிப்புணா்வு

பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தில்  புனித சவேரியாா்  ஆலயத்தில்  கிறிஸ்துமஸ் விழா இசை பாடல்களுடன் வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:38 pm

DIN

பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தில்  புனித சவேரியாா்  ஆலயத்தில்  கிறிஸ்துமஸ் விழா இசை பாடல்களுடன் வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது.

 பங்குத் தந்தை ஜான்சன் எட்வா்ட் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா், பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த  புனல்வாசல் கிராமத்திலுள்ள 600-க்கும் மேற்பட்ட  வீடுகளுக்கு   சென்று துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.

மேலும், பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி, அவற்றை தவிா்க்க பொதுமக்களிடம் வலியுறுத்தினா்.

இதேபோல,  பூவானம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு  சென்று துணிப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.