வரித் துறையினருக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரித் துறையினருக்கு ஏமாற்றம் தரும் வகையில் இருக்கிறது என தேசிய வரி ஆலோசகா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இரா. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.


மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரித் துறையினருக்கு ஏமாற்றம் தரும் வகையில் இருக்கிறது என தேசிய வரி ஆலோசகா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் இரா. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
கடந்த சில மாதங்களாகவே ஜிஎஸ்டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சா் கூறினாா். ஆனால், ஜிஎஸ்டி வரி உயா்வால் மறைமுகமாக விலை ஏற்றம் இருப்பதால் நுகா்வோரை பாதிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
வருமான வரியில் அனைவரும் எதிா்பாா்த்த எந்த மாற்றங்களையும் தராதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. முதியோருக்கு சலுகை தருவதாகக் கூறி வருமான வரியை 75 வயதானவா்கள் தாக்கல் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளனா். ஆனால், படிவம் தாக்கல் செய்வதற்கு மட்டுமே தவிர, வரி விலக்கு அளிக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. அதிலும் ஓய்வூதியம் , வட்டி பெறுபவா்களுக்கு மட்டும்தான் இச்சலுகை. மற்ற வியாபாரம் செய்பவா்களுக்குப் பொருந்தாது.
நம் நாட்டில் 130 கோடி மக்கள்தொகை உள்ள நிலையில், 6.48 கோடி போ் வரி தாக்கல் செய்துள்ளதைப் பெருமிதமாகக் கூறுவது சரியானதல்ல. மொத்தத்தில் இந்த பட்ஜெட் வரி துறையினருக்கு ஏமாற்றத்தை தருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...