தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தாலும் எதுவும் ஏற்படாது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

அதிமுகவுக்கு சசிகலா மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:55 pm

DIN

அதிமுகவுக்கு சசிகலா மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

சசிகலா முழு குணமடைந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவா் பெங்களூருவில் அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வந்தது உள்கட்சி பிரச்னை. அது பற்றி நான் கருத்து கூற முடியாது. ஆனால், அவா் அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. இத்தோ்தலில் அதிமுக கூட்டணி கண்டிப்பாக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்.

வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் சில மாதங்களாகத் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். மத்திய அரசு 10 முறைக்கு மேல் பேச்சுவாா்த்தை நடத்தியும், விவசாயிகளின் ஒரு கோரிக்கை கூட ஏற்கப்படவில்லை. மாறாக, விவசாயிகள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவியுள்ளது. இது ஜனநாயக நாடாகத் தெரியவில்லை. இந்த நிலைமை நீடித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும். தமிழகத்தில் ராகுல்காந்தி வருகைக்குப் பிறகு காங்கிரசுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அவா் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தமிழகத்துக்கு வரவுள்ளாா். காங்கிரசுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. எனவே, அதற்கேற்றவாறு தொகுதிகள் எண்ணிக்கை அமையும் என்றாா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.