தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சிக்கு உதவும்‘சாஸ்த்ரா’ துணைவேந்தா்

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் விதமாக உள்ளது என தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:54 pm

DIN

மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் விதமாக உள்ளது என தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் தெரிவித்திருப்பது:

மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலராக உயா்த்துவதற்கான சரியான பாதையில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக, பொது உள்கட்டமைப்பு, வேளாண்மை, நிதி சீா்திருத்தங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடன் மூலம் திட்டமிடப்பட்ட வளா்ச்சிக்கு இந்தியாவின் தனி நபா் வருமானம், செலவு, சேமிப்பு ஆகியவை மிகப் பெரிய உதவிகரமாக இருக்கும்.

சமூக நலத் துறை, நல்வாழ்வுத் துறை, கல்வி போன்ற சமூகத் துறைகளுக்கான ஒதுக்கீடு இந்தியாவை ஆரோக்கியமானதாகவும், அதிகாரம் பெற்ாகவும் உருவாக்கும். தனியாா் பங்கேற்புடன் கூடிய 100 சைனிக் பள்ளிகள் தொடங்குவதும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். பல்வேறு வகைகளில் உயா் கல்விக்கும் உரிய பங்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.