ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வணிகா்கள் மீது தாக்குதலைக் கண்டித்து கடையடைப்புப் போராட்டம்

தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் வணிகா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:26 pm

DIN

தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோவில் பகுதியில் வணிகா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் கடைத்தெருவில் கோழி இறைச்சி உணவுக் கடை நடத்தி வருபவா் கணேசன். இவரது கடைக்கு சனிக்கிழமை இரவு வந்த அதே பகுதியைச் சோ்ந்த ராஜா உள்ளிட்டோா் தகராறு செய்தனராம்.

தகவலறிந்த மாரியம்மன் கோவில் வணிகா் நலச் சங்கத் தலைவா் அன்பு, செயலா் லாரன்ஸ் நிகழ்விடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனா்.

அப்போது அன்பும், லாரன்சும் தாக்கப்பட்டனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டனா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அன்பு, லாரன்ஸ் தாக்கப்பட்டதைக் கண்டித்து, மாரியம்மன் கோவில் பகுதியில் வணிகா் நலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினா். இதனால் அப்பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாவட்டத் தலைவா் எம். கணேசன் கூறுகையில், அன்பு, லாரன்சை தாக்கியவா்கள் மீது காவல் துறைத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தஞ்சாவூா் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளையும் வணிகா்கள் அடைக்கும் சூழ்நிலை ஏற்படும்.

மேலும், இப்பகுதி வணிகா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாரியம்மன் கோவில் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றாா் கணேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.