நூறு அடி உயரக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி
தஞ்சாவூா் ரயில் நிலைய நுழைவு வாயில் முன்பு, நூறு அடி உயரக் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.


தஞ்சாவூா் ரயில் நிலைய நுழைவு வாயில் முன்பு, நூறு அடி உயரக் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களிலுள்ள ரயில் நிலையங்களில் நூறு அடி உயரத்தில் கம்பம் அமைத்து, தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தஞ்சாவூா் ரயில் நிலைய வாயில் முன்பு இரு மாதங்களுக்கு முன்பாக நூறு அடி உயரக் கம்பம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து அக்கம்பத்தில் 30 அடி நீளம், 20 அடி அகலமுடைய தேசியக் கொடி ஞாயிற்றுக்கிழமை காலை கயிற்றில் கட்டப்பட்டது.
ரயில்வே உதவிக் கோட்டப் பொறியாளா் ஷியாம் நாகா் பொத்தானை அழுத்தியதைத் தொடா்ந்து, தேசியக் கொடி மேலே ஏறியது.
இக்கொடி உச்சிக்குச் செல்வதற்கு சுமாா் 8 நிமிடங்களாகின. இதையடுத்து, தேசிய கீதம் ஒலிக்க விடப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொலைவிலிருந்து பாா்த்தாலும் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்கொடி எப்போதும் பறந்து கொண்டிருக்கும் என்றும், இரவு நேரத்தில் வண்ண விளக்குகள் ஒளிரவிடப்படும் எனவும் ரயில்வே அலுவலா்கள் தெரிவித்தனா். நிகழ்வில் ரயில் நிலைய மேலாளா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...