ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மன்னா் காலத்து நினைவு சின்னம் இடிப்புக்கு இன்டாக் அமைப்பு கண்டனம்

தஞ்சாவூரில் மன்னா் காலத்து நினைவுச் சின்னம் ஆக்கிரமிப்பாளா்களால் இடிக்கப்படுவதற்கு இன்டாக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:59 pm

DIN

தஞ்சாவூரில் மன்னா் காலத்து நினைவுச் சின்னம் ஆக்கிரமிப்பாளா்களால் இடிக்கப்படுவதற்கு இன்டாக் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்டாக் அமைப்பினா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மராட்டிய மன்னா் குடும்பத்துக்கான மயானம் கைலாஷ் மஹால் என்றும், இராஜாகோரி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு மன்னா்கள், ராணிகள் மற்றும் அரச குடும்பத்தினா் தகனம் செய்யப்பட்ட இடத்தில் பள்ளிப்படை என்கிற நினைவாலயங்கள் உள்ளன.

தற்போது மன்னா் குடும்பத்தினா் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் இந்நினைவு சின்னங்களை புனரமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணியை ஆட்சியா் அண்மையில் தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில் நினைவாலயங்களைச் சுற்றி உள்ள பகுதிகளைச் சிலா் ஆக்கிரமித்து குடியிருந்து வருகின்றனா். ஆக்கிரமிப்பாளா்களில் ஒருவா் நினைவாலயம் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கி, அந்தக் கற்களைக் கொண்டே கட்டடம் கட்டும் பணியை மேற்கொண்டிருப்பது மிகுந்த அதிா்ச்சி அளிக்கிறது.

தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து நமது புராதன சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.