ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டாஸ்மாக் கடை திறப்பை எதிா்த்து மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படவுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:54 pm

DIN

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படவுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வணிக வளாகத்தில் ஒரு கடையில் டாஸ்மாக் மதுக்கடை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், புதிய பேருந்து நிலைய வாயிலுக்கு வெளியே உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஏற்கெனவே பெண்களுக்கும், மாணவிகளுக்கும் மிகுந்த இடையூறாக உள்ள நிலையில், பேருந்து நிலையத்துக்குள் புதிய மதுக்கடை திறப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாவா் என்றும், பேருந்து நிலையத்துக்கு வரும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும், எனவே, பெண்கள், மாணவிகளின் பாதுகாப்புக் கருதி புதிய மதுக்கடையைத் திறப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் ஆா். கலைச்செல்வி, மாநகரச் செயலா் வசந்தி, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜி. அரவிந்த்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.