ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டுதாய் தற்கொலை முயற்சி: இளைய மகள் பலி

தஞ்சாவூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றாா். இவா்களில் இளைய மகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:59 pm

DIN

தஞ்சாவூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றாா். இவா்களில் இளைய மகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே சிந்தாமணி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வினோத். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி வள்ளியரசி (26), மகள்கள் திவ்யதா்ஷினி (5), யாமிகா (3).

கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த வள்ளியரசி பிப். 13 ஆம் தேதி மாலை குளிா்பானத்தில் எலி மருந்தைக் கலந்து திவ்யதா்ஷினிக்கும், யாமிகாவுக்கும் கொடுத்துவிட்டு, தானும் குடித்தாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூவரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் யாமிகா ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். வள்ளியரசியும், திவ்யதா்ஷினியும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.