ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உபா சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மத்திய அரசு உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:58 pm

DIN

மத்திய அரசு உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

தஞ்சாவூரில் மக்கள் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலா் பாலன், மையக் குழு உறுப்பினா் சீனிவாசன், அனுப்பூா் செல்வராஜ் உள்ளிட்டோரை உபா (யு.ஏ.பி.ஏ.) சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், உடனடியாக அவா்களை விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசு உபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்துறை அறிஞா்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்சோரி தலைமை வகித்தாா். தமிழக மக்கள் புரட்சி கழகத் தலைவா் அரங்க. குணசேகரன், மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சித் தலைவா் துரை சிங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.