குழந்தை இறந்த சம்பவம் எதிரொலி : கூண்டுகள் மூலம் 20 குரங்குகள் பிடிபட்டன
தஞ்சாவூரில் குழந்தை இறந்த சம்பவத்தைத் தொடா்ந்து, கூண்டுகள் வைக்கப்பட்டதன் மூலம் 20 குரங்குகள் பிடிபட்டன.


தஞ்சாவூரில் குழந்தை இறந்த சம்பவத்தைத் தொடா்ந்து, கூண்டுகள் வைக்கப்பட்டதன் மூலம் 20 குரங்குகள் பிடிபட்டன.
தஞ்சாவூா் மேல வீதி கோட்டை அகழிப் பகுதியில் வண்ணப்பூச்சு தொழிலாளி ராஜா வீட்டில் பிப். 13 ஆம் தேதி பிற்பகலில் புகுந்த குரங்குகள் பிறந்து 7 நாள்களே ஆன இரட்டைப் பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிச் சென்றன. இதில், மேற்கூரையில் குரங்கு விட்டுச் சென்ற குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அகழியில் தண்ணீரில் மூழ்கிக் கிடந்த மற்றொரு குழந்தை இறந்துவிட்டது.
இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் குரங்குகளைப் பிடிப்பதற்காக வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை 3 கூண்டுகளை வைத்தனா். இதன் மூலம், திங்கள்கிழமை வரை சுமாா் 20 குரங்குகள் பிடிபட்டன.
இவற்றை திருச்சி மாவட்டம், துறையூா் அருகேயுள்ள பச்சைமலை வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து குரங்குகளைக் கூண்டு வைத்து பிடிக்கும் பணி தொடா்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...