நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காசாங்காட்டில் இலவச தையல் பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், காசாங்காடு ஊராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சமுதாய மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு 3 மாத இலவச தையல் பயிற்சி வகுப

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:38 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், காசாங்காடு ஊராட்சியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சமுதாய மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பெண்களுக்கு 3 மாத இலவச தையல் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சி வகுப்பில் காசாங்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 100 பெண்களுக்கு 6 பயிற்சியாளா்கள் மாா்ச் மாதம் வரை தினமும் தையல் பயிற்சி அளிக்கவுள்ளனா். பயிற்சி முடிந்ததும் அனைவருக்கும் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் சான்றிதழ் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளா் எஸ்.டி.எஸ். செல்வம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தாா். மதுக்கூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் வி. செல்வநாயகி, காசாங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் சு. விசாலாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பி. சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வி. ரெங்கராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தொடக்கத்தில், பயிற்சியாளா் மரியம் சந்திரகலா வரவேற்றாா். நிறைவில், கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.