தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6.67 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 2,500 வீதம் வழங்குவதற்காக ரூ. 166.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:44 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6.67 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 2,500 வீதம் வழங்குவதற்காக ரூ. 166.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம்.

தஞ்சாவூா் நுகா்வோா் கூட்டுறவு விற்பனை பண்டகசாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் பேசியது:

மாவட்டத்தில் செயல்படும் 1,185 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 6,67,941 குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 2,500 வீதம் வழங்குவதற்காக ரூ. 166.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 20 கிராம் முந்திரி, உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்காக தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ரூ. 4.50 கோடி நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக பச்சரிசி, சா்க்கரை தலா 667.941 டன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பொங்கல் பரிசுத் தொகுப்பை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் திங்கள்கிழமை முதல் ஜன. 12 ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாளில் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாளில் பெற்றுக் கொள்ளாதவா்களுக்கு ஜன. 13 ஆம் தேதி வழங்கப்படும் என்றாா் வைத்திலிங்கம்.

விழாவில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ், மாவட்ட வருவாய் அலுவலா் பொ. அரவிந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு. மனோகரன், தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ஆா். காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கும்பகோணம் அருகே தாராசுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், ஒரத்தநாடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை வைத்திலிங்கம் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.